இது மேலானவற்றிற்கு ஒரு புறனடை கூறுகின்றது. இ-ள்: அவ்விரு கூற்று மயக்கத்தையும் முறையானே ஆராய்ந்து இவையென அறிக, இலக்கணங்களை அறிந்தோர் என்றவாறு. இவ்வென அறிதலாவது:- கோட்டைக்குறைத்தான்- சூதினைக் கன்றினான்- நெறியைச்சென்றான்- என இரண்டாவதன் பொருளாகிய குறைத்தல் முதலாயின பொருட்கண் கோட்டின்கண் குறைத்தான்- சூதின்கண் கன்றினான்- நெறிக்கண் சென்றான்- எனக் குறைத்தல் முதலியவற்றிற்குக் கோடு முதலாயின இடனும் ஆகலின் தன் பொருளில் தீராது ஏழாவது மயங்கிற்று எனவும், இவளைக் கொள்ளும் இவ்வணி என இரண்டாவதன் பொருட்கண் இவட்குக் கொள்ளும் இவ்வணி எனவும், அவனால் செய்யத்தகும் அக்காரியம் எனவரும் மூன்றாவதன் பொருட்கண் அவற்குச் செய்யத்தகும் அக்காரியம் எனவும், கருவூரின் கிழக்கு- சாத்தனின் நெடியன்- மனைவாழ்க்கையின் பற்றுவிட்டான்- ஊரில் தீர்ந்தான்- எனவரும் ஐந்தாவதன் பொருட்கண் கருவூர்க்குக் கிழக்கு- சாத்தற்கு நெடியன்- மனைவாழ்க்கைக்குப் பற்றுவிட்டான்- ஊர்க்குத் தீர்ந்தான் எனவும், யானையது கோடு கூரிது- ஆவினது கன்று |