கரிது-எனவரும் ஆறாவதன் பொருட்கண், யானைக்குக்கோடு கூரிது, ஆவிற்குக் கன்று கரிது எனவும் காலைக்கண் வரும் என ஏழாவதன் பொருட்கண் காலைக்குவரும் எனவும், ‘இதற்கு இது’ என்பது படவரும் தன் பொருளின் தீராது நான்காவது மயங்கிற்று எனவும், | | | மணலுள் ஈன்ற எனவரும் ஏழாவதன் பொருட்கண், ‘கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற முளைஓ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்’ | அகம். 212 | எனவும், கொக்கினின்றும் ஒழிந்த எனவரும் ஐந்தாவதன் பொருட்கண், | | ‘கொக்கினுக்கு ஒழிந்த தீம்பழம்’ | நற். 280 | | எனவும் தம் பொருளில் தீர்ந்து நான்காவது மயங்கிற்று எனவும் அறிதலாம். பிறவும் அன்ன. தொக்குழி மயங்குவனவும் உள. அவை மேற்கூறுப பொருள் மயக்கம் தன் பொருளில் தீராது மயங்குதலின் உருபு ஏற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லும் தம்முள் இயைபு உடையவாம் ஆதலின் அத்தொடர்ப்பொருள் அவ் வேற்றுமை உருபின் பொருள் ஆவான் சேறலின், அதனைச் சார்ந்து அதன் பொருளாம் என்பதூஉம், உருபு மயக்கம் தன் பொருளின் தீர்ந்து மயங்குதலின் உருபு ஏற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லும் தம்முள் இயைபுடையன அல்லவாம் ஆதலின், அத்தொடர்ப்பொருள் அவ்வேறுமை உருபின் பொருள் ஆவான் செல்லாமையான், அதன் பொருள் ஆகாது தான் செல்லும் பக்கத்து வேற்றுமை உருபினைச் சார்ந்து அதன் பொருளாம் என்பதூஉம் தாமே விளங்கும் என்று உணர்க. 62 | விளக்கம் | கோட்டைக்குறைத்தாள் முதலிய சொற்றொடர்களில் கோடு முதலியன செயப்படுபொருள். கோட்டின் கண் குறைத்தாள் முதலியவற்றில கோடு முதலியன |
|
|
|