இவற்றான் ‘மக்கட்சுட்டு’ என்ற சொற்றொடரின் விளக்கமும் இலக்கணமுடிபும் பற்றிக் கருத்து வேறுபாடு சான்றோரிடை உண்மை பெற்றாம். எங்ஙனம் பொருள் செய்யினும், ‘மக்கட்சுட்டு‘ பொருள்படுதற்கண் அஃறிணைப்பொருண்மையதாகவே அமைதலின், ‘அவரல பிறவே’ என்பது வழுவமைதியாகவே கொள்ளவேண்டியதாய் உள்ளது; என்னை? மக்களாகிய பொருள் உயர்திணை எனவே, அஃது அல்லாத பொருள் அஃறிணை என்றலே வழாநிலையாதலின். இக்கருத்து ஆய்தற்குரியது, 4 | சூறாவளி | மக்கட்சுட்டு என்பது பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனவும், மக்கள் என்பது ஆகுபெயரான் மக்கட்சுட்டை உணர்த்தி நின்றது எனவும் கூறினார். மக்கள் என்பது ஆகுபெயரான் மக்கட்சுட்டை உணர்த்திற்றேல், | | ‘பாணன் பறையன் துடியன் கடம்பனென்று அந்நான் கல்லது குடியும் இல்லை.’ | புறம்.355 | என்புழிப்போல, ஆண்டு ‘அஃது’ அஃறிணைச்சொல் ஆதல் வேண்டும். வேண்டவே, ‘அஃதுஅலபிறவே’ என அஃறிணைச் சுட்டான் கூறாது ‘அவர் அல பிறவே’ என்றல், திணைவழுவாய் முடியும் ஆதலின், அஃது ஆசிரியர் கருத்து அன்று என்க. இன்னோரன்னவை எல்லாம் தொல்காப்பிய முதற் சூத்திரவிருத்தியுள் விளங்கக் கூறினாம் ஆண்டுக்காண்க.உயர்திணை என்பது இறந்தகால வினைத்தொகை என்றார். உயர்ச்சிமுக்காலத்தும் ஒத்து இயல்வது அறியார்போலும். திணை என்பது ஒழுக்கம் என்றார். அஃறிணையுள் உயிர் இல்லனவற்றிற்கு ஒழுக்கம் இன்மையின், அது பொருளன்று. இவை உயர்சாதி இவை இழிசாதி என உலகத்துப் |
|
|
|