ஐயம் அறுத்தல்- உலகத்தில் இதுதான் முதல், இது தான் சினை என்ற வரையறை இல்லை’ முதல் சினை என்பன சொல்லுவான் குறிப்பினால் கொள்ளப்படுவன. யானைக்கோடு என்ற தொடரில் யானை முதல்; கோடு சினை; கோட்டது நுனி என்ற தொடரில் கோடு முதல்; நுனி சினை; இவ்வாறு ஒவ்வொரு பொருட்கும் முதல்தன்மையும் சினைத்தன்மையும் சொல்லுவான் குறிப்பினால் மயங்கி வருதலின், ஒரே பொருள் முதலாகக் குறித்தவழி முதலுக்கு ஏற்ற உருபுகளையும், சினையாகக் குறித்தவழிச் சினைக்கு ஏற்ற உருபுகளையும் பெறும். யானைக்கோடு என்ற தொடரில் கோடு சினை; கோட்டது நுனி என்ற தொடரில் கோடு என்ற சினை முதலுக்கு உரிய அது உருபைப் பெற்றது என்று கொள்ளற்க; அது முதலாகியே அது உருபைப் பெற்றுள்ளது என்று கொள்க- என்று முதல் சினை பற்றிய ஐயம் அறுத்தற்கு எழுந்தது இந்நூற்பாவாகும். பிண்டம்- பலபொருள் தொகுதி; பிண்டத்திற்கும் முதலுக்கும் வேற்றுமை- கை கால், வாய், கண், மூக்கு, செவி முதலிய உறுப்புக்களை உடைய முதலுக்கு உடம்பு என்ற தனிப்பட்ட பெயர் உண்டு. ஆனால் நெல், பொன், மணி முதலியவற்றால் ஆகிய பிண்டமாகியதற்குத் தனிப்பட்ட முறையில் வேறுபெயர் இல்லை. ஆதலின் பிண்டத்தை முதல்சினையுள் அடக்காது |