என்ற நூற்பாக்களுக்குச் சேனாவரையர் உரைத்த உரையை உட்கொண்டு கூறப்பட்டுள்ளது. இனி இந்நூற்பா நன்னூலின் 316ஆம் நூற்பாவாக அமைந்துள்ளது. அந்நூற்பாவுரையுள் சிவஞானமுனிவர், “கடங்கள் இவை, படங்கள் இவை என்றாற்போல, முதற் பொருள்கள் இவை சினைப்பொருள்கள் இவை என இரண்டாக வேறு உள்ளன இலவாம்; ஒருபொருளையே இரண்டாகப் பகுத்துக் கூறுவார் குறிப்பின் மாத்திரையவேயாம். பிண்டப்பொருளும் அத்தன்மைத்தாம் என்றவாறு” எனவும், “யானையைக்குறித்தவழி யானை உண்டாய்க் கால் கை கோடு முதலியன வேறு இல்லையாய், கால் கை கோடு முதலியவற்றைக் குறித்தவழி அவை உண்டாய் யானைவேறு இல்லையாய் நிற்கும் ஒருபொருட் பகுதியவாதலின் இவ்வாறு கூறப்பட்டன” எனவும், ‘வேறுஉளவில’ என்றமையான் யானையைக் காலை வெட்டினான் என ஐயுருபு முதல்சினை இரண்டன்பாலும் வாராமைக்கு ஏது கூறினார் ஆயிற்று’ எனவும், “இனி ஒரு பொருளின் முதலைக் கருதிச் சினை எனவும், சினையைக் கருதி முதல் எனவும் கூறுதல் போலப் பிண்டித்த பொருள்களைக் கருதியல்லது பிண்டமெனல் |