கூடாமையின், ‘பிண்டமும் அற்றே’ என்ற துணையானே பிண்டித்த பொருள்களும் அனையவே என்பது தாமே போதரும் எனவும்,“இச் சூத்திரத்திற்கு இவ்வாறன்றி யானையது கோடு கோட்டது நுனி- என ஒன்றற்குச் சினை மற்றொன்றற்கு முதலாயும் ஒன்றற்கு முதல் மற்றொன்றற்குச் சினையாயும் நியதியின்றி வருதலின் இவையேமுதல்; இவையே சினை என வேறு அறியக் கிடப்பன இல்லை; அவை சொல்லுவோர் குறிப்பின் ஆங்காங்கு முதல் சினை என உணரப்படுவனவாம் நெல்லினது குப்பை; குப்பையினது நெல்- எனப் பிண்டப் பொருளும் அத்தன்மைத்தாய்க் கிழமையாய் நின்றது கிழமைத்தாயும் கிழமைத்தாய் நின்றது கிழமையாயும் நியதியின்றிச் சொல்லுவோர் குறிப்பினான் அறியவரும் என்று பொருள் கூறுவாரும் உளர்” (மயிலைநாதர் உரை; மறுப்பின் முற்பகுதி இவ்வாசிரியர் உரைத்த உரை) என்றும், “இப்பொருள் முதல்சினை இரண்டன்பாலும் ஐஉருபு வாராமைக்கு ஏது ஆகாமையானும், இவ்வாறு முதலும் சினையும் வருதல் வெளிப்படை ஆதலின் இவற்றை ‘உரைப்போர் குறிப்பின’ எனக்கூற வேண்டாமையானும், ஆசிரியர் தொல்காப்பியர் முதல் சினைகள் ஒருபொருட் பகுதிய என்பது தோன்ற. |