என்ற எடுத்துக்காட்டுகளான் ஈரிடத்தும் இரண்டன் உருபு வருதலை ஏற்றுக்கொண்ட முனிவர் (நன்.296 உரை) அதனை மறந்து, முதலொடு சினைக்கு ஒற்றுமை உண்மை என்ற காரணம் பற்றி மயக்கமின்றி முதல்சினை இரண்டன்கண்ணும் ஐயுருபு வருதலை ஏற்றுக் கோடலை விடுத்து, அவ்வொற்றுமை பற்றியே முதல்சினை இரண்டன் கண்ணும் ஐயுருபு வருதல் கூடாது என்று, சேனாவரையர் முதலாயினார் உரைக்கு மாறாக, இந்நூற்பாவிற்கு வலிந்துகொண்ட போந்த பொருளால் படுவதொரு சிறப்பான செய்தி இன்மையானும்,‘இவை முதல் இவைசினை என்ற வரையறை இன்று; அவை சொல்லுவான் குறிப்பினாலேயே முதல் எனவும் சினை எனவும் கொள்ளப்படல் வேண்டும்’ என்பதைக் குறிக்க வேண்டியதன் இன்றியமையாமை மேலே விளக்கப்பட்டமையானும். ‘உரைப்போர் குறிப்பின’ என்ற சொற்றொடருக்கு இவைமுதல் இவை சினை என்பன கூறுவார் குறிப்பினாலேயே வரையறை செய்யப்படும் என்பதே பொருளாகலானும், இவ்வாறு முதலும் சினையும் வருதல் வெளிப்படை அன்மையானும், தொல்காப்பியனார், |
(தொல்.சொல். 89) என்ற நூற்பாவால் முதல்இவை சினை இவை என்ற செய்தி சொல்லுவார் குறிப்பினாலேயே அறியப்படும் என்று கூறினார் ஆகலானும், தாம் கொண்ட கொள்கைக்குத் தொல்காப்பியனாரையும் வலிய இழுத்துத் தம் கருத்தை மறுக்கும் அத் தொல்காப்பிய நூற்பாவின் ஈற்றடியை விடுத்து முதலடியையே கொண்டு முனிவர் விளக்கம் தர முயல்வது பொருந்தாக் கூற்றாதல் வெள்ளிடைமலையாதலானும், |