இஃது அவ்வேற்றுமை உருபுகளுள் சில உருபுகள் செய்யுளுள் திரியவும் பெறும் என்கின்றது. இ-ள்: ஐயும் ஆனும் குவ்வும் ஆகிய மூன்று உருபும் செய்யுளிடத்து அகரமாய்த் திரிந்து நிற்கவும் பெறும்; அஃறிணை இடத்தாயின் ஆன் உருபு அன்றி ஐயும் குவ்வும் திரியா என்றவாறு. ‘ஆகா அஃறிணைக்கு ஆன் அல்லாதன’ எனவே, மூன்றும் உயர்திணைக்கண் ஆம் என்பது தானே போதரும் என்க. ‘அஆகும்’ எனப் பொதுப்படக்கூறிய அதனானே, ஐகாரம் அகரமாய்த் திரிதலும், ஆன் அகரம் பெறுதலும், குவ்வீறு அகரமாய்த் திரிதலும் ஆம் எனக் கொள்க. வரலாறு: காவலோனை என்பது |