சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-65,66247

  ‘காவ லோனக் களிறுஅஞ் சும்மே’
எனவும், புலவரான் என்பது
‘புரைதீர் கேள்விப் புலவ ரான’
எனவும், ஆசிரியர்க்கு என்பது
‘கடிநிலை இன்றே ஆசிரி யார்க்க’

தொல்.389

எனவும் அஃறிணைக்கண் புள்ளினான் என்பது

‘புள்ளினான’ எனவும் வரும். உம்மை எதிர்மறை ஆதலின் இவ்வாறு திரிதல் சிறுபான்மை எனக்கொள்க. 65
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘குஐ ன் என வரூஉம் இறுதி
அவ்வொடு சிவணும் செய்யு ளுள்ளே.’

தொல்.சொல். 109

  ‘அ-எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின்
குவ்வும் ஐயும் இல்என மொழிப.’

110

  முழுதும்

நன்.318, தொ.வி. 64

 
  ‘கு ஆன் என வரூஉம் இறுதி
அவ்வொடு சிவணும் யாப்பின் மருங்கே.

மு.வீ.பெ.86

  ‘அஃறிணை மருங்கின் ஆன்அ- ஆகும்’

மு.வீ.பெ.87


உருபேற்ற சொல்லின் முடிபு
 

224

எல்லை இன்னும் அதுவும் பெயர்கொளும்
அல்ல வினைகொளும் நான்குஏழ் இருமையும்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்.
 

இஃது உருபு ஏற்றசொற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள்: எல்லைப் பொருண்மைக்கண் வரும் இன்உருபும் அது என் உருபும் பெயரைக் கொண்டு முடியும்; இவை அல்லவாகிய உருபுகள் முற்றும் எச்சமும் ஆகிய வினையைக் கொண்டு முடியும்; அவற்றுள் நான்கன் உருபும் ஏழன் உருபும்