சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-66,67249

‘இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே’ யாதலின், அவை விசேடித்து
நிற்பனஅன்றி வேறொன்றான் விசேடிக்கப்படுவன அல்ல; ஆதலின் ஈண்டு
உருபுகளைக்கொள்ளாது உருபு ஏற்ற பெயர்களையே கோடல் வேண்டும்.

எழுவாய் வேற்றுமைக்கு முடிக்குஞ் சொல் ‘வினைபெயர் வினாக்கொளல்
அதன்பய னிலையே’ (இ.வி. 197) என்புழிக் கூறப்பட்டது. எட்டாவது படர்க்கையோரை
முன்னிலைப்படுத்தும் பெயரும் பெயரது விகாரமும் ஆதலின், அது பெயர்
வேற்றுமையை ஒத்துப் பயனிலை கொள்ளுமாறு உய்த்துணரப்பட்டது ஆதலின், ஏனைய
இரண்டு முதல் ஏழு ஈறாகிய வேற்றுமைகளுக்கு ஈண்டு முடிபு கூறப்பட்டது.

சாத்தனது என்ற குறிப்பு முற்று, படுத்தல் ஓசையால் வினையாலணையும்
பெயராகி, வந்தது- நன்று- என்ற பயனிலைகளுக்கு எழுவாய் ஆயிற்று.
 

ஒத்த நூற்பா
 

  முழுதும்

நன்.319


வேற்றுமைத் தொகையை விரிக்குமாறு
 

225 வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
ஈற்றுநின்று இயலும் தொகைவயின் பிரிந்து
பல்லா றாகப் பொருள்புணர்ந்து இசைக்கும்
எல்லாச் சொல்லும் உரிய என்ப.
 

இது வேற்றுமைத்தொகையை விரிப்புழி வரும் வேறுபாடு அன்மொழித்தொகையை விரிப்புழி வரும் வேறுபாட்டோடு ஒக்கும் என்கின்றது.

இ-ள்: வேற்றுமைத் தொகையை விரிக்கும் இடத்து வேற்றுமையே அன்றி
அன்மொழித்தொகையை விரிப்புழிப்பல்லாற்றான் அன்மொழிப் பொருளொடு புணர்ந்து வரும் எல்லாச்சொல்லும் விரிக்கப்படும் என்றவாறு.