இது மேல் ஐம்பால் என்றவற்றுள் உயர்திணை இத்துணைப்பால் உடைத்து என்கின்றது. இ-ள்: ஆண்பாலும் பெண்பாலும் பலர்பாலும் என்னும் இம் மூன்றுபாலையும் உடைத்து உயர்திணை என்றவாறு. அறிவு முதலாயினவற்றான் ஆண்மகன் சிறந்தமையின் ஆண்பால் முற் கூறப்பட்டது. ஆண்பன்மையும் பெண்பன்மையும் இவ்விருபாலும் தொக்க பன்மையும் அன்றிப் பன்மை என வேறு இன்மையின் பலர்பால் பிற் கூறப்பட்டது. இம் மூவகைப் பன்மையும், வந்தார் சென்றார் என்னும் ஓர் ஈற்று வாய்பாடே கொண்டு முடிதலின், பலர்பால் என ஒன்றாய் அடங்கின. 5 |