ஆண்பால் பெண்பால் என்னும் வழக்கு உயர்திணைக்கே அன்றி அஃறிணைக்கு இன்று என்றார். ‘ஆண்பால் எல்லாம் ஆண் எனற்கு உரிய, பெண்பால் எல்லாம் பெண் எனற்கு உரிய’ (தொல். பொருள். 605) என்னும் மரபியல் சூத்திரங்களையும், ஆண்மை சுட்டிய பெயர் பெண்மை சுட்டிய பெயர் என்னும் குறியீடுகளையும், களிறு பிடி முதலிய வழக்குக்களையும் மறந்தார்போலும். |