சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-5-627

 

அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே’

‘ஒருவன் ஒருத்திபலர் ஒன்றுபல என்று
மருவியபால் ஐந்தும் வகுப்பின்-பொருவிலா
ஓங்கு திணைப்பால் ஒருமூன் றொழிந்தவை
பாங்கில் அஃறிணைப்பா லாம்’
முழுதும்

பால்ஐந்து ஆண்பெண் பலர்உயர் திணையே  

தொல்.சொல். 2




நே. சொல். 4
நன். 262 மு.வீ.பெ. 10

தொ.வி. 50

 
164 ஒன்றே பல என்று இருபாற்று அஃறிணை.
 
 

இஃது அஃறிணை இத்துணைப்பால் உடைத்து என்கின்றது.

இ-ள்: ஒருமைப்பாலும் பன்மைபாலும் என்று இரு பகுதியை உடைத்து அஃறிணை
என்றவாறு

ஆண் பெண் என்பன அஃறிணைக்கும் உளவேனும் அவ்விரண்டற்கும் வந்தது
என்பது அல்லது வழக்கினுள் வேறு வாய்பாடு இன்மையின், ஆண்பால் பெண்பால்
என்னும் வழக்கு உயர்திணைக்கே அன்றி அஃறிணைக்கு இன்று. 6
 

விளக்கம்
 

வினைமுற்றில் ஆண்பெண் பாகுபாடு இன்மை குறித்து இவ்விளக்கம் தரப் பட்டது.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

     ‘ஒன்றறி சொல்லே பலஅறி சொல்என்று,
ஆயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே.’

முழுதும்

‘அன்றியும் ஒன்றுபல அஃறிணை என்ப’
 

தொல்.சொல்.3

நன்-263, மு.வீ.பெ.11


தொ.வி. 50
 

ஐயமறுத்தல்
 

165 தெய்வமும் பேடும்ஆம் அவ்விரு பகுதியும்
இவ்என அறியும் அந் தம்தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்.