என்புழி விளங்காதோ எனின், விளங்காது; ஆண்டு உருபு பெயர் இறுதி வந்து நிற்கும்என்றார். அங்ஙனம் நின்ற உருபு தொகும். தொகுத்தல் என்பது புலப்படாமை அன்றே;மற்று அது பின்பு புலப்படுங்கால் தான் நின்ற ஈற்றே புலப்படும் என்பது சொல்லவேண்டும் என்பது.உருபு தொக்கும் விரிந்தும் நிற்கும் என்றார். அவ்வுரை பேயும் அன்று; ஆண்டுப் பிற சொற்களும் உள, அவ்வுருபு போல ஆண்டே தொகுத்தலும் விரித்தலும் உடையன என்றவாறு” என்று அவ்விரு நூற்பாக்களுக்கும் உரை கூறியுள்ளார். இனித் தெய்வச்சிலையார் “வேற்றுமைக்கு உரிய பொருளை விரியக் கூறுங்கால், முதற்பெயர் இறுதிக்கண் இயலும் தொகைச்சொல்லின்கண் தொகையாம் தன்மையில் பிரிந்து பல நெறியாகப் பொருளைப் புணர்ந்து ஒலிக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்று சொல்லுவர் ஆசிரியர். தொகுத்தல்என்பது செறிதல். முதற்பெயரொடு செறிவது தொகை என்று பெயர் ஆயிற்று. படைக்கை- படையைப் பிடித்த கை, படையை எடுத்த கை, படையை ஏந்தின கை எனவும்....... .......... இவ்வாறு வருவன எல்லாம் எடுத்து ஓதின் வரம்பு இல ஆதலின், |