சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

254 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

“அற்றேல், அச்சூத்திரத்திற்குப் பொருள் யாதோ எனின், கூறுதும்.
 

  ‘வேற்றுமை ................என்ப’

தொல்.சொல்.83

என்றது ஓத்தின் இறுதிக்கண் புறனடை. இதன்பொருள்.
 
  ‘காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்’

தொல்.சொல்.72


என்றல் தொடக்கத்தனவாக ஈண்டுக் கூறிய பொருளே அன்றி இன்னும்
வேற்றுமைப்பொருளை விரித்துக் கூறுங் காலத்துக் காப்பின் ஒப்பின் என்றல்
தொடக்கத்துத்தொகைச்சொற்களின் வேறுபட்டுப் பொருளொடு புணர்ந்து இசைக்கும்
எல்லாச்சொற்களும் ஈண்டுக் கோடற்குரிய என்பர் என்றவாறு. முடிக்குஞ் சொல்லைப்
பொருள்என்றார் தொடர்மொழிப் பொருள் அதன்கண்ணவாகலின்.

காப்பின் ஒப்பின் முதலிய சொற்கள் புரத்தல்- ஓம்புதல்- நேர்தல் நிகர்த்தல்-
என்றல் தொடக்கத்துப் பொருள் புணர்ந்து இசைக்கும் சொற்களை எல்லாம் கருத்து
வகையான் உள்ளடக்கித் தொகுத்த மொழியாய் நிற்றலின் அவற்றைத் ‘தொகை’ என்றும்,
 

  ‘அதனின் இயறல் அதற்றகு கிளவி’

தொல்.சொல்.74

என்றல் தொடக்கத்துத் தொடர் மொழிகளின் இறுதியில் சொற்களே ஈண்டுக்
கொள்ளப்படும் என்பது விளக்கிய

‘ஈற்று நின்று இயலும் தொகை’ என்றும்,

ஊரைப்பேணும்-ஊரைத்தாங்கும்- என்றாற் போல்வன பிறவாற்றான் வருவனவும்
காத்தற் பொருளே பயந்து நிற்றலின் அவற்றையும் தழுவுதற்குப் ‘பல்லாறாக’ என்றும்
கூறினார்.