சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-67255

‘காப்பின் ஒப்பின்’ என்றாரேனும் அதனைக்காத்தல் அதனை ஒத்தல் எனச்
சூத்திரம் செய்தலே ஆசிரியர் கருத்து எனக் கொள்க. பிறவும் அன்ன.

அற்றேல், இஃது உத்தியால் கொள்ளப்படுமாலோ எனின், இன்னோரன்னவை
எடுத்தோத்து இல்வழியே உத்தியால் கொள்வது என மறுக்க. அங்ஙனம் அல்லாக்கால்
புறனடை என்பதே வேண்டாததாய் முடியும் என்று ஒழிக.

“இனிச் சேனாவரையர் வேற்றுமைத்தொகை விரியுமாறு கூறுதற்கு எழுந்தது
இச்சூத்திரம் என்றும், அது விரியுங்கால் அன்மொழித்தொகை போல விரியும் என்றும்,
அன்மொழித் தொகைக்கண் சொற்பெய்து விரித்தலும் அநுவாத முகத்தான் ஈண்டே
பெற்றாம் என்றும் உரைத்தார்.

எச்ச வியலுள் கூறப்படும் தொகைச்சொல் விரியுமாறு ஈண்டுக் கூறுதற்கோர்
இயைபு இல்லை என்பது மேற் காட்டினாம் ஆகலானும், அன்மொழித்தொகை
விரியுமாறு ஈண்டே பெற்றாம் எனின் இன்னோரன்னவை அநுலாத முகத்தான்
பெறுதற்கு உரியன ஆகாது தன்னைப்பற்றுதல் என்னும் குற்றமாய் முடியுமாகலானும்
அவை பொருந்தா என மறுக்க. இதனானே உரையாசிரியர் நச்சினார்க்கினியர்
உரைகளும் மறுக்கப்பட்டன” என்பர். சூ.வி.பக்கம் 48-50

ஆசிரியர் தொல்காப்பியனார் தொகைவிரிப்புழி மயங்கும் மயக்கம் வரும்
ஓத்தினால் கூறுதலின், அதற்கு இயைய ஈண்டுத்தொகை விரிக்குமாறு கூறினார்.
வேற்றுமை இயலுள் கூறியது விரி இலக்கணமே ஆதலின், அதனொடு இயையத் தொகை
இலக்கணமன்றித் தொகை விரியுங்கால் படும் இலக்கணமும் கூறுதலும் பொருந்தும்
ஆகலானும், தொகை இலக்கணம் கூறுங்கால் ‘வேற்றுமைத்தொகையே வேற்றுமை இயல’
என வேற்றுமைத் தொடர்மொழியோடு மாட்டெறிதலின் உருபோடு பொருளும் விரியும்
மொழிகளையும் முன்னர்க் கூறிப்பின்னரே மாட்டெறிய வேண்டும் ஆதலானும்