சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-68257

தொழில் முதல் நிலை என்றது தொழிலது காரணத்தை; காரியத்தின் முதல்
நிற்றலின் முதல் நிலை ஆயிற்று. காரணம் எனினும் காரகம் எனினும் ஒக்கும்.

வனைந்தான் என்றவழி, வனைதல் தொழிலும், வனைதல் கருத்தாவும்,
வனையப்பட்ட குடமும், வனைதற்கு இடமாகிய நிலமும், அத்தொழில் நிகழும் காலமும்,
அதற்குக் கருவி ஆகிய திகிரி முதலாயினவும், வனையப்பட்ட குடத்தைக் கொள்வானும்,
வனைந்ததனான் ஆம்பயனும் ஆகிய எட்டும் பற்றி அத்தொழில் நிகழ்ந்தவாறு
கண்டுகொள்க. வனைவித் தான் என்பதற்கும் இவை ஒக்கும். இனிக் குழையன் என்ற
வழி, உடையன் எனக் கருதுதல் தொழிலும், கருதுதல் கருத்தாவும், கருதப்பட்ட
குழையும், பிறவும் பற்றி அக்கருத்து நிகழ்ந்தவாறு காண்க.

அஃதேல், தொழிலின் வேறாயது காரகம் ஆதலின் வளைதல் தொழிற்கு
அத்தொழில்தான் காரகம் ஆமாறு என்னை எனின், வனைந்தான் என்பது வனைதலைச்
செய்தான் என்னும் பொருட்டு ஆகலின், செய்தற்கு வனைதல் செயப்படு பொருள்
நீர்மைத்தாய்க் காரகம் ஆம் என்பது. அற்று ஆதலின் அன்றே, கொளலோ
கொண்டான் என்பது இரண்டாம் வேற்றுமைத்தொடர் ஆயிற்று என்பது.

இன்னதற்காக- இது பயனாக- என்னும் இரண்டு அருகி அல்லது வாராமையின்,
‘அன்ன மரபின் இரண்டொடும் எனப் பிரித்துக் கூறினார்.

குன்றத் தருவன ஆவன: செயப்படுபொருளும், ஏற்பதும், பயனும் ஆம். கொடி
ஆடிற்று- வளி வழங்கிற்று- என்புழிச் செயப்படுபொருளும் ஏற்பதும் பயனும் ஆகிய
முதல்நிலை இல்லை ஆயினும், ஒழிந்தனவற்றான் ஆடுதலும்