சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

258 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

வழங்குதலும் ஆகிய தொழில் நிகழ்ந்தவாறு கண்டு கொள்க.

இவ்வாறு தொழில் முதல்நிலை எட்டு எனவே, ஏவல் வினை முதலையும்
இயற்றும் வினை முதலையும் ‘செய்வது என்றும் செயப்படுபொருள் நீர்மைத்து ஆகிய
வனையப்படுவது முதலியவற்றையும் இயற்றப்படுவதனையும் வேறுபடுக்கப்படுவதனையும்
எய்தப்படுவதனையும் முறையே ‘வினை’ என்றும் ‘செயப்படுபொருள்’ என்றும்,
முதற்காரணமும் துணைக்கரணமும் நிமித்த காரணமும் பற்றிப் பலவேறு வகைப்பட்டு
வரும் மூன்றாவதன் பொருளையும் ஐந்தாவதன் பொருளையும் ‘கருவி’ என்றும்,
பொருள் முதலியஅறுவகை இடத்தினையும் ‘நிலன்’ என்றும், ‘காலம்’ என்றும்,
நான்காவதன் பொருள் எல்லாவற்றையும் ‘இன்னதற்காக’ ‘இது பயனாக’ என்றும், ஈண்டு
மேற்கூறிப் போந்த வேற்றுமைப் பொருளை எல்லாம் தொகுத்துக் கூறினார் என்பதூஉம்
ஆயிற்று என்று உணர்க.
 

  இங்ஙனம் ஈண்டுத் தொகுத்ததனால் பயன்:
‘செய்வது ஆதி’ (243) எனவும்
‘செயப்படு பொருளைச் செய்தது போல 356
எனவும், மேல்வரும் வினைக்கு இலக்கணம் கூறுதலும், பிறவும் ஆம்.

‘குன்றுவ குன்றும்’ என்பதனால் பயன் எல்லாத்தொழிற்கும் முதல்நிலை எட்டும்
குன்றாது வருமோ சில தொழிற்குச் சில குன்றி வருமோ என்னும் ஐயம் நீக்குதலும்,
செயப்படு பொருள் குன்றிய வினையை உணர்த்தும் சொல் இரண்டாவதனொடு
இயையாது எனப்பெறுதலும் ஆம். 68
 

முதலாவது பெயரியல் முற்றிற்று

விளக்கம்
 

இந்நூற்பாவுரை பெரும்பாலும் தொல்காப்பயிச் சொற்படல 112, 113 ஆம் நூற்பாக்களுக்குச் சேனாவரையர் உரைத்த உரையை அடியொற்றி எழுதப்பட்டுள்ளது.