சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

268 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளக்கம்
 

முதல் நிலைகளாவன- நடவா முதலிய தன்வினைப்பகுதி, நடப்பி வருவி முதலிய
பிறவினைப்பகுதி, பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்ற அறுவகைப்
பெயர்கள் முதலியன.

நடந்தான் முதலிய மூன்றும் மூன்று காலங்களும் முறையே காட்டும் தன்வினைக்கு
எடுத்துக்காட்டு; நடப்பித்தான் முதலிய மூன்றும் மூன்று காலங்களும் முறையே காட்டும்
பிறவினைத் தெரிநிலை வினைக்கு எடுத்துக்காட்டு.

 
கச்சினன், கழலினன
இல்லத்தன், புறத்தன்
மூவாட்டையன், ஐயாட்டையன்
கண்ணன், தோளன்
கரியன், செய்யன்
துணங்கையன், சத்தன்

பொன்னன்னன், புலிபோல்வான்

-
-
-
-
-
-

-

பொருட்பெயர் அடியாகப் பிறந்த குறிப்பு வினை.
இடப்பெயர் அடியாகப் பிறந்த குறிப்பு வினை.
காலப்பெயர அடியாகப் பிறந்த குறிப்பு வினை.
சினைப்பெயர் அடியாகப் பிறந்த குறிப்பு வினை.
பண்புப்பெயர் அடியாகப் பிறந்த குறிப்பு வினை.
தொழிற்பெயர் அடியாகப் பிறந்த குறிப்பு வினை.

ஒப்பு அடியாக பிறந்த குறிப்புவினை.

அன்மை, இன்மை உண்மை, வன்மை என்பன பண்பு பற்றியும் குறிப்புப் பற்றியும்
தனித்தனி வரும் ஆற்றல் உடையன. பண்பு என்பது எப்பொழுதும் இருப்பது. குறிப்பு
என்பது எப்பொழுதோ ஒரு நேரத்து நிகழ்வது.

எப்பொருளும் அல்லன் இறைவன்- அல்லன்- பண்பு;
                    அவைதாம் இவை அல்ல-அல்ல- குறிப்பு;
                    ஆ உண்டு - உண்டு-பண்பு;