சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

270 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

காண்க. அன்மை இன்மை முதலிய பற்றிய செய்திகள் யாவும் ‘அன்மையின்
இன்மையின்’ (தொல்.சொல்.216) என்னும் நூற்பா உரையில் நச்சினார்க்கினியர்
உரைத்தனவே.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே.’

தொல்.சொல். 201

 
  ‘அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும்
கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும்
ஒப்பி னானும் பண்பி னானும் என்று
அப்பால் காலம் குறிப்பொடு தோன்றும்.’

213

 
  ‘அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும் குறிப்பே காலம்.’

214

 
  ‘நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன்
கடியன் மகத்தன் கரியன்-தொடியன் என
ஒண்ணுதலாய் மற்றையவும் எண்ணி உயர்திணையின்
நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு.’

நே.சொல். 47

 
  ‘கரிதுஅரிது தீது கடிது நெடிது
பெரிது உடைத்து வெய்து பிறிது-பரிது என்ப
ஆயிழாய் பன்மையினும் செல்ல அஃறிணையின்
மேய வினைக்குறிப்பாம் மிக்கு.’

நே.சொல். 49

 
  ‘பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே.’

நன். 321

 
  ‘தொடர்வினைக் குணமே தொகுக்குங் காலை
முதல்நிலைத் தனிவினைப் பகுதி முன்னர்ப்
பகுதிமுதல் ஐந்தனுள் வேண்டுவ பொருந்தியும்