| அவையினுள் ஒன்றணை யாதே திரிந்தும் திணையே பால்இடம் பொழுதுஇவை தீண்டித் தொழிற்பெயர் முற்றுஈ ரெச்சமாய்த் தோன்றிச் சிறப்பும் பொதுவுமெனச் சேறல் அன்றியும் தன்வினை பிறவினை அவ்விரு வினைப்பொது விதிவினை மறைவினை இவைஇரு வினைப்பொதுச் செய்வினை செயப்பாட் டுவ்வினை இப்பொது முதல்வினை சினைவினை இவைஇரு வினைப்பொது இருவகை எச்சத் தினுக்கும் பொதுவினை தெரிநிலை வினையே தெரியா நிலைவினை வினைக்குறிப்பு அன்றியும் வினாவினைக் குறிப்பும் பொதுச்சிறப் பினுக்கே பொதுவாய் நிற்றல் வினைபெயர் தமக்கு வேறின் றாதல் முற்றுஈ ரெச்சம் விதிமறை வினைபெயர் இயல்பா கியசொல் திரியா கியசொல் ஒருமொழி பலமொழிக்கு ஒழிபாய் நிற்றல் ஆதியாப் பலவே ஆகும் என்ப.’ | இ.கொ. 67 |
|
| ‘முதல்நிலை திரிந்தும் திரியா தாகியும் இருவகை ஆகிய இவ்வினை ஈற்றின் விப்பி இணைந்தும் வேறுவேறு அணைந்தும் இயன்று எண்வகையாம் பிறவினை என்ப.’ | இ.கொ. 71 |
|
| ‘செய்விஎன் வினையுள் செய்வினை சிலவே.’ | 72 |
|
| ‘சொல்லால் தெரிவினை பொருளால் தெரிவினை என்றுஇரு திறனே தன்பிற பொதுவினை.’ | 73 |
|
| ‘மறைமூ வகையா வழங்குவர் புலவர்.’ | 74 |
| ‘இதுவிதி இதுமறை என்னப் படாவே.’ | 75 |
| ‘நிலைமொழி மறையே வருமொழி மறையே இருமொழி மறையே எனமூ வகைமறை.’ | 76 |
| ‘விதிச்சொல் மறைப்பொருள் ஆகி வருநவும் மறைச்சொல் விதிப்பொருள் ஆகிவருநவும் | |