| விதிச்சொலின் முதல்நிலை மறைப்பொருள் பெறுநவும் மறைச்சொல்லின் முதல்நிலை விதிப்பொருள் பெறுநவும் உளஎன மொழிகுவர் ஒருபுடை யோரே.’ | 77 |
|
| முன்னிலை ஏவல் ஒருமைச்சொற் போலும் முதனிலை இன்னிலைத் தாது பகுதிஎன் றாம்செப் பிளமுலையாய் அந்நிலைத் தாது சகன்மத் தோடும் அகன் மகமாய்ப் பின்னிலை விப்பி வரின்கா ரிதமெனப் பேர் பெறுமே. | பி.வி. 35 |
|
| வினைக்குறிப்பு என்ப வினைபோல் விகுதி பெற்றுஇடம் பாற்கும் பெயர்ப்பகு பதமே.’ | தொ.வி.123 |
|
| வினைக்குறிப்பு ஒன்றன்பால் விகுதி து-இஃதே வலிமிகத் துறுடுவாம் ஐ-ர்-யவ்வும்-அல் இன்னும் அனவும் உறைஈற்ற பெயர்க்கே அவ்விறும் எல்லாம் பலவின் பாற்கே.’ | 124 |
| ‘வினைக்குறிப்பு எஞ்சி ஈற்றகரம் பொதுவே.’ | 125 |
| ‘அன்மை வினைக்குறிப்பு அணையும் திரிபொருள்.’ | 126 |
| ‘இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்று சொல்லப்படு மூன்று காலமும் குறிப்பு வினையொடு பொருந்தும் மெய்ந்நிலை உடைய வினைமொழி பிறக்கும் விழுமிய நெறிக்கே.’ | மு.வீ.சொல்.3 |
| | |
| ‘குறிப்பினும் வினையினும் தோன்றிக் காலமொடு வரும்வினைச் சொல்எல்லாம் உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும் ஆயிரு திணைக்கும் ஒப்ப உரிமையும் எனமுக் கூற்றன.’ | மு.வீ.சொல்.4 |
| ‘உண்மையின் இன்மையின் வன்மையின் அன்மையின் வருவன காலம் குறிப்பால் தோன்றும்.’ | மு.வீ.சொல்.16 |