| ‘செய்குஎன் கிளவி வினையொடு முடியினும் அவ்வியல் திரியாது என்மனார் புலவர்’ | தொல்-சொல்-204 |
|
| ‘மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப’ | 207 |
ஒத்த நூற்பாக்கள்:
|
| ‘முற்றெச்சம் என்றிரண்டாய்....................... நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து. | நே.சொல்.39 |
| முழுதும் | நன்.322 |
| முதல்நிலை தொழிற்பெயர் முற்றுஈ ரெச்சமென்று ஐவகை யுள்ளே அடங்கும் வினையே.’ | இ.கொ. 69 |
| ‘செயப்பாட்டு வினையினைச் செப்புங் காலை வினைமுதல் செயப்படு பொருளே தொழிற்பெயர் மூன்றின் பயனிலை யாயும்அவை யாயும் முதல்நிலை தொழிற்பெயர் முற்றுஈ ரெச்சம் வினைமுதல் செயப்படு பொருள்ஏழ் ஆதியுள் படுசொல் அற்றே படுபொரு ளாயும் அவைகண் படுசொல் அனைந்து வந்தும் முற்றுத் தொழிற்பெயர் முதலினுள் படுசொல் வரினும் படுபொருள் வருதலின் றாயும் பெயர்ப்பின் வினையெச் சத்தின் பின்னர்ப் படுசொல் வந்தே வேறுபொருள் பட்டும் தன்பொருள் பிறபொருள் இவ்விரண் டற்கும் பொதுவாய்ப் படுசொல் பொருந்தி நின்றும் படுசொல் வரப்படாப் படுபொரு ளாயும் படுசொல் வந்தே படுபொரு ளாயும் இன்னும் பலவாய் இயலும் என்ப.’ | இ.கொ. 78 |