சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-3277

  ‘தனக்குப் பயனே பிறர்க்குப் பயனே
தனக்கும் பிறர்க்கும் சார்இரு பயனே
தனக்கும் பிறர்க்கும் பயன்சார்பு இலவே
எனநால் வகையாய் இயன்றே இவைதாம்
சிற்றறி வோர்வினை பேரறி வோர்வினை
எனஇரு கூறாய் எட்டாம் என்பர்.’

இ.கொ.79

 
    ‘அவைதாம்
மனம்மொழி மெய்அறிவு ஆகிய நான்கின்
அசைவே ஆகியும் அவ்வசைவு இன்றியும்
நல்வினை தீவினை வெறுவினை எனநடந்து
அறிந்து செய்வினை அறியாது செய்வினை
அசேதனம் செய்வினை எனவே அமர்ந்து
தீவினை நல்வினை சிலமுறை திறம்பிச்

‘செய்யா வினையே செய்வினை யாகிச்
செய்இரு வினையே செய்யா வினையாய்
இன்னும் பலவாம் இலக்கணம் பெறுமே.’

இ.கொ.81

 

 

‘எச்சம் ஒன்று இல்லை இவை அடை என்றும்
வேறுஎச்சம் என்றில்லை விகாரமுற்று என்றும்
எச்சம் ஒன்று என்றும் இரண்டே என்றும்
தன்வினை பிறவினை இவ்விரண்டு என்றும்
முப்பொழுது அறிதலான் மூன்றே என்றும்
தலைமைஇல் தலைமை எனஇரண்டு என்றும்
காரணம் காரியம் என இரண்டு என்றும்
முதல்வினை சினைவினை எனஇரண்டு என்றும்
இயல்பு திரிபுஎன இரண்டே என்றும்
விரியே தொகையே எனஇரண்டு என்றும்
வினையெச்சம் ஒன்றையே வெவ்வேறு என்றும்
ஈறுசொல் பற்றி இரண்டே என்றும்
இன்னும் பலபல இலக்கண மாகச்
சொன்னார் சிலரே துணியார் பலரே.’

இ.கொ.84

  ‘வினைமுற்று ஒருமூன்று எச்சம் இரண்டு
வினைக்குறிப்பு எனஇவை வினையின் வகுப்பே.’

 தொ.வி.103