சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-4,5281

  ‘பன்னிய போதறி லாதேசம் என்னும் பரப்பைபதம்
இன்னிய கர்த்தரி நீங்காதிங் ஙந்த வினைமுற்றிலே
முன்னிய கர்த்தரி கர்மணி பாவம்இம் மூன்றிடத்தும்
மன்னிய தங்ஙெனச் சொல்ஆற்ப னேபதம் வந்தெய்துமே.’

பி.வி. 36

 
  ‘பெயரே ஏற்றுமற்று ஒன்றனை வேண்டாது
ஏற்பது வினைவினைக் குறிப்பு முற்றே.’

தொ.வி.104


முற்று வினைச்சொல்லின் வகையும் விரியும்
 

231 ஒருவன்முதல் ஐந்தையும் படர்க்கை இடத்தும்
ஒருமை பன்மையைத் தன்மைமுன் னிலையினும்
முக்கா லத்தினும் முரண முறையே
மூவைந்து இருமூன்று ஆறாய் முற்று
வினைப்பதம் ஒன்றே மூவொன் பான்ஆம்.
 

இது முற்கூறிப் போந்த முற்று வினைச்சொற்கு வகையும் விரியும் கூறுகின்றது.

இ-ள் ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐம்பாலையும் படர்க்கை
இடத்தும், ஒருமை பன்மைப் பால்களைத் தன்மை இடத்தும் முன்னிலை இடத்தும்
ஏறிட்டு முக்காலங்களானும் உறழ, முறையே படர்க்கை வினைமுற்றுப் பதினைந்தும்
தன்மை வினைமுற்று ஆறும் முன்னிலை வினைமுற்று ஆறும் ஆக வினைமுற்றுச்
சொல் ஒன்றே இருபத்தேழ் திறனாம் என்றவாறு. 5
 

விளக்கம்
 

ஆண், பெண், பலர், ஒன்று, பல x 3 காலம்- 15 படர்க்கை வினை.
ஒருமை, பன்மை x 3 காலம் - 6 தன்மைவினை.
ஒருமை, பன்மை x 3 காலம் - 6 முன்னிலைவினை.
ஆக, மூவிட வினைமுற்றுக்களின் கூடுதல்:27