வினை முற்றுக்களைப் பிரயோக விவேகம் தன் 36 ஆம் நூற்பாவில் அந்நியகர்மணிக்கிரியாபதமாகிய பரப்பை பதம் எனவும், கர்த்திருகர் மணிக்கிரியா பதமாகிய ஆற்பனேபதம் எனவும் இரு பெரும்பிரிவினுள் அடக்கியுள்ளது. வினை முற்றினைப் பலவகையானும் தம் வினையியலுள் பகுத்து விளக்கிக்காட்டுவர் இலக்கணக் கொத்துடையார். |
ஒத்த நூற்பாக்கள்
|
| இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச் சிறப்புடை மரபின் அம்முக் காலமும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூ விடத்தான் வினையினும் குறிப்பினும் மெய்ம்மை யானும் ஈரிரண்டாகும் அவ்வாறு என்ப முற்றியல் மொழியே.’ | தொல்.சொல்.427 |
|
| ‘எவ்வயின் வினையும் அவ்வியல் நிலையும்.’ | 428 |
| ‘ஒருவன் ஒருத்தி சிறப்புப் பலர்ஒன் றொடுபலவை மருஷ படர்க்கை யொடுகாலம் மூன்றையும் வைத்து உறழத் துருவம் மலிபதி னெட்டாம் தொழிற்பதம் | வீ.சோ.71 |
| | |
| ‘முன்னிலை தன்மை இடத்தினில் காலங்கள் மூன்றையும்வைத்து உன்னும் ஒருமை சிறப்பொடு பன்மையும் உய்த்துஉறழ்ந்தால் பன்னும் தொழிற்சொல் பதினெட்டு உளகருத்தரப் பொருள்மேல் மன்னி நிகழ்தொகை முப்பதொ டாறும் வகுத்தறியே.’ | 72 |
| | |
| ‘இறப்பு நிகழ்வெதிர்வாம் காலங்கள் ஏற்றும் குறிப்பும் .........முற்று ........... மூன்றிடத்து நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து.’ | நே.சொல்.39 |
| முழுதும் | நன்.342 |