சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-6285

புக்கனன்- உண்டனன்- உரைத்தனன்- தின்றனன்- என இடைநிலைக் கடதற
எழுத்துக்களின் முன் அன் பெற்றும், அஞ்சினன்- கலக்கினன்- எனவும், உரிஞினன்-
நண்ணினன்- பொருநினன்- திருமினன்- துன்னினன்- எனவும், போயினன்- சேரினன்-
சொல்லினன்- வவ்வினன்- துள்ளினன் எனவும், குற்றுகரமும் ஙகரம் ஒழிந்த
மெல்லெழுத்துக்களும் ழகரம் ஒழிந்த இடையெழுத்துக்களும் ஆகிய ஏனை
எழுத்துக்களின் முன் அன் பெறாது இடைநிலை இன்னே பெற்றும் வரும்.

இனி, அது நிகழ்காலம் பற்றி வருங்கால், உண்ணா நின்றனன்- உண்கின்றனன்-
எனவும், உண்ணா கிடந்தனன்- உண்ணா இருந்தனன்- எனவும், ஆநின்று- நின்று
என்னும் இடைநிலைகளின் முன்னும் சிறுபான்மை கிட- இரு- என்னும்
இடைநிலைகளின் முன்னும் அன் பெற்றும் வரும்.

இனி, இஃது எதிர்காலத்து வருங்கால், அன்பெறாது இடைநிலைப் பகரவகரங்களே
பெற்றும், வகரம் ஏற்புழிக் குகரமும் உகரமும் அடுத்தும், உண்பன்- உரைப்பன்-
செல்வன்- போவன்- அஞ்சுவன்- மொழிகுவன்- உரிஞுவன்- எனவரும். பிறவும் அன்ன.

இனி, ஆனஈறு-புக்கான்- உண்டான்- உரைத்தான்- தின்றான்- அஞ்சினான்-
கலக்கினான்- உரிஞினான்- போயினான்- போனான்- எனவும், உண்ணாநின்றான் -
உண்கின்றான்- உண்கிறான்- உண்ணாகிடந்தான்- உண்ணாவிருந்தான்- எனவும்,
உண்பான்- உரைப்பான்- செல்வான்- போவான் அஞ்சுவான்- கலக்குவான்-
மொழிகுவான்- உரிஞுவான்- எனவும், அன்பெறாது முறையேமுக்காலமும் காட்டும் இடை
நிலைகளே பெற்று வரும்.

இனி, அள்ஈறும் ஆள்ஈறும், அர்ஈறும் ஆர்ஈறும் முறையே அன்ஈற்றோடும்.
ஆன்ஈற்றோடும் ஒத்துப் புக்கனள்- புக்காள்- புக்கனர்- புக்கார் எனவரும். பிறவும்
அன்ன.