இனிப் பகரஈறு உண்ப- உரிஞுப- என உகரம் பெறாதும் பெற்றும், மார்ஈறு, | | ‘எள்ளுமார் வந்தாரே ஈங்கு’ | கலி.81 | என உகரம் பெற்றும், | | ‘ஆர்த்தார் கொண்மார் வந்தார்’ எனப் பெறாதும் வரும். பிறவும் அன்ன. | | | உண்டிலன், உண்ணா நின்றலின், உண்ணலன் முதலிய இவற்றின் மறைவாய்ப்பாடும் அறிக.
இனி, வினையொடு முடியும் என்ற மார்ஈற்றுச் சொல்
‘பீடின்று பெருகிய திருவின் பாடுஇல் மன்னரைப் பாடன்மார் எமரே’ புறம். 37 | | | ‘காமம் படர்அட வருந்திய நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே’ | நன். 64 |
எனப் பெயரொடு முடிந்ததால் எனின், இவை பாடுக- காண்க- என்னும் வியங்கோட்கு எதிர்மறையாய்ப் பாடாது ஒழிக- காணாதுஒழிக- என ஏவற் பொருளாய் நின்றன; மார் ஈறு அல்ல என்க. அல்லதூஉம், பாடுவார்- காண்பார்- என்பன- சில வியங்கோள் முற்று என்று கொண்டு அவற்றிற்கு எதிர்மறையாய்ப் படாது ஒழிவார் - என ஏவற்பொருளவாய் நின்றன என்றலும் ஒன்று. அன்றி, மார் ஈறு ஆமாகில் இங்ஙனம் ஏவல் பொருண்மையை உணர்த்துமாறு இல்லை என்க. இனிக் கரியன், கரியான், கரியள், கரியாள் கரியர், கரியார் என வினைக்குறிப்பு வந்தன காண்க. பிறவும் அன்ன. 6 | விளக்கம் | நிறுத்தமுறை, 229ஆம் நூற்பாச் செய்தி, |
|
|
|