சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-6289

  ‘அர் ஆர் ப என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கின் படர்க்கைச்சொல்லே.’

தொல்.சொல். 206

 
  ‘மாரைக்கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப.’

207

  ‘தான்ஆனும் தாள்ஆளும் தார்ஆரும் தார்களொடு ஆர்கள் என்று
மேல்நாம் உரைத்த பிரத்தியமாகும்
ஆனா இறப்பில் தொழிற்பதம்.............ஆய்ந்தறியே’

வீ.சோ. 73

     
  ‘நின்றான் கிறானொடு நின்றாள் கிறாள்இவை நின்றார்கிறார்
நின்றார்க ளோடு கிறார்களும்.............. படர்க்கைப்
பின்தான் நிகழ்கை தொழிற்பதம் பேர்த்தறியே.

74

  ‘வான்பானும் வாள்பாளும் வார்பாரும்
வார்களும் பார்களும்சீர்.....
வான்பான் மலியும் எதிர்வின் தொழிற்பதம்’

75

  ‘ஆங்குரைத்த அன்ஆனும் அள்ஆளும் அர்ஆர்ப
பாங்குடைய முப்பால் படர்க்கையாம்.’

நே. சொல். 41

  ‘அன்அன் இறுமொழி ஆண்பாற் படர்க்கை’

நன். 325

  ‘அள்ஆள் இறுமொழி பெண்பாற் படர்க்கை.’

326

  ‘அர்ஆர் ப-ஊர் அகரம்மார் ஈற்ற
பல்லோர் படர்க்கைமார் வினையொடும் முடிமே.’

327

  ‘அன்ஆன் அள்ஆள் இறுதிக்கிளவி
உயர்திணை ஒருமைப் படர்க்கைச் சொல்லோ.’

மு.வீ.வி.16

  ‘அர்ஆர் பகர இறுதிக் கிளவி
அத்திணை மருங்கின் பல்லோர் படர்க்கை.’

11

  ‘மாரைக் கிளவி அவற்றோ ரற்றே.’

12