நின்றது, பிற்காலத்தில் இது பொதுவினையாயிற்று. எனினும், நன்னூலாரும் இவரும் பழைய மரபினை வழாநிலை எனவும், புது மரபினை வழுவமைதி எனவும் கொள்வாராயினர். யார் என்பது இருதிணைப் பொதுவினை என்பதனை, இவரை யடுத்துத் தோன்றிய இலக்கணக்கொத்துநூலார் வேறில்லை உண்டுயார் வேண்டும் தகும்படும்’ (இ.கொ.85) என்ற நூற்பாவில் விளக்கியுள்ளார்.இனி, பலர்பாலுக்கே உரிய யாவர் என்ற பெயர் மருவி வகரம் கெட்டு யார் எனவரும். அது பலர்பாலையே காட்டும் பெயர் என்பதும் அறிக. யார் என்ற பெயர், யார் என்ற வினைக்குறிப்பு இவற்றின் வேறுபாடும் உணர்க. உரை நச்சினார்க்கினியர் தொல். சொல். 212 ஆம் நூற்பாவில் உரைத்ததேயாம். |