சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-8293

என இன் இடைநிலை பெற்று அது திரியாதும் திரிந்தும் வரும்.

புக்கின்று- உண்டின்று- வந்தின்று- சென்றின்று- என்பன எதிர்மறுத்தலை
உணர்த்தும் இல்லது லகரம் னகரமாய்த் திரிந்து நின்ற எதிர்மறைவினை ஆதல்,
புக்கிலன்- உண்டிலன்- வந்திலன்- சென்றிலன்- என்பன போலும் ஏனைப்பாற்
சொல்லான் அறிக.
 

  இது’ தாலி களைந்தன்றும் இலனே’
வியந்தன்றும் இலனே’
‘இழிந்தன்றும் இலனே’
 புறம். 77
 புறம். 77
 புறம். 77

என உயர் திணைக்கண்ணும் வந்ததால் எனின அவை களைந்தான்- வியந்தான்-
இழிந்தான்- என்பனவற்றிற்கு மறையாய்க் களைந்திலன்- வியந்திலன் இழிந்திலன்- என
நிற்கின்றவை- களைந்தன்றுமிலன் வியந்தன்றுமிலன்- இழிந்தன்றுமிலன்- எனமுற்று
வினைத்திரி சொல்லாய் நின்றன.

இனி, வினைக் குறிப்பின்கண் மூன்று காலத்திற்கும் உரியவாய், குழையது-
நிலத்தது- மூவாட்டையது- வெண்கோட்டது- கரிது- நடைத்து- எனத் துவ்வீறும்,
குழையிற்று- மேற்று- வைகற்று- மருப்பிற்று- வடிவிற்று- செலவிற்று- என-றுவ்வீறும்,
குண்டுகட்டு- குறுந்தாட்டு-என டுவ்வீறும்வரும்.

இனி, அகரஈறு மூன்று காலமும்பற்றி வரும். அவற்றுள் இறந்தகாலம்
பற்றிவருங்கால், தொக்கனதொக்க-உண்டன உண்ட- வந்தன வந்த-சென்றன சென்ற-என,
கடதறஎன்னும் இடைநிலை எழுத்துக்களின் முன் அன்சாரியை பெற்றும், பெறாதும்,

அங்ஙனமன்றி எஞ்சின- தப்பின எனவும், உரிஞின- நண்ணின- பொருநின-
திருமின- துன்னின எனவும், போயின- சேரின- சொல்லின- வவ்வின- துள்ளின-
எனவும், குற்றியலுகரத்தின் முன்னும் ஙகாரம் ஒழிந்த மெல்லெழுத்துக்களின் முன்னும்
ழகாரம்ஒழிந்த இடை எழுத்துக்களின் முன்னும் இடைநிலை இன்பெற்றும், போயன