சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

302 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

                    பிரிபுவேறு படூஉம் செய்திய ஆகி
                    இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய.

நிறுத்த முறையானே விரவுவினை உணர்த்துவனவற்றுள் இஃது அவற்றின் பெயரும்
முறையும் தொகையும் கூறுகின்றது.

இ-ள்: தன் தொழில் உணர்த்துவது ஆகிய தன்மை வினை வினைக்குறிபபு
முற்றுச்சொற்களும், தனக்கு எதிர்முகமாகநின்ற பொருளின் தொழில் உணர்த்துவது
ஆகிய முன்னிலை வினைவினைக்குறிப்பு முற்றுச் சொற்களும், ஏவல்பொருண்மையைக்
கொண்டு நிற்பது ஆகிய வியங்கோள் தெரிநிலை வினைமுற்றுச்சொற்களும்,
வேறுபாடுதன்னை உணர்த்துவது ஆகிய வேறு என்னும் வினைக்குறிப்பு முற்றுச்சொல்லும்
ஒரு பொருளினது உண்மையை உணர்த்துவது ஆகிய உண்டு என்னும் வினைக்குறிப்பு
முற்றுச்சொல்லும், ஒருபொருளினது இன்மையை உணர்த்துவன ஆகிய இல்லை இல்
என்னும் இரு கூற்று வினைக்குறிப்பு முற்றுச்சொற்களும், செய்யும் என்னும் வாய்பாடு
பற்றிவரும் உம் ஈற்றுத் தெரிநிலை வினை முற்றுச்சொல்லும் ஆகிய இவ்வெட்டொடு
பெயர் ஆகிய ஒழிபை உடைய பெயரெச்சவினை வினைக்குறிப்புச் சொற்களும் வினை
ஆகிய ஒழிபை உடைய வினையெச்சவினை வினைக்குறிப்புச் சொற்களும் ஆகிய இவ்
வடைவின்கண் இன்ன வினைச்சொற்கள் எல்லாம் பொதுமையின் பிரிந்து ஒருகால்
உயர்திணையை உணர்த்தியும் ஒருகால் அஃறிணையை உணர்த்தியும் வேறுபடு தொழிலை
உடையவாய் இருதிணையும் உணர்த்தும் சொல்லாதற்கு ஒத்த உரிமையவாம் என்றவாறு.

வாழ்த்தல் முதலிய பிறபொருளும் உடைத்து ஆகலான் வியங்கோள் என்றது
மிகுதி நோக்கிச் சென்ற குறி. செய்யும் என்னும் வாய்பாட்டான் உண்ணும் தின்னும்
என்னும் தொடக்கத்தன எல்லாம் தழுவப்பட்டன, எல்லாத் தொழிலும்