சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

306 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  பாற்பட உணர்த்தும் பகுதிய இரண்டனுள்
செய்குஎன் ஒருமையும் செய்கும் என் பன்மையும்
வினையொடு முடியினும் விளம்பிய முற்றே.
 
 

நிறுத்த முறையானே இது தன்மை ஒருமையும் பன்மையும் கூறுகின்றது.

இ-ள் கடதறக்களை ஊர்ந்த குற்றியலுகர ஈறும் அல்- அன்- என்- ஏன்- என்னும்
ஈறும் ஆகிய எண்வகை ஈற்றினையும் ஈறாக உடைய மொழிகள் இருதிணைக்கண்ணும்
உளவாகிய ஒருவன் ஒருத்தி ஒன்று என்னும் மூவகை ஒருமைத்தன்மையினையும்,

அம்மும் ஆமும் ஆகிய ஈற்றை உடைய வினை வினைக்குறிப்பு மொழிகள்
முன்நின்றாரைத் தன்னொடு உளப்படுக்கும் தன்மைப்பன்மையினையும், எம்மும்
ஏமும்ஓமும் ஆகிய ஈற்றை உடைய வினைவினைக்குறிப்பு மொழிகள் படர்க்கையாரைத்
தன்னொடு உளப்படுக்கும் தன்மைப் பன்மையினையும், உம் என்னும் இடைச்சொல்லின்
உகரத்தை ஊர்ந்து வரும் கும்மும் டும்மும் தும்மும் றும்மும் ஆகிய ஈற்றை உடைய
வினைகள் அவ்விருதிறத்தாரையும் ஒருங்கேயும் தனித் தனியேயும் தன்னொடு
உளப்படுக்கும் தன்மைப் பன்மையினையும் பகுதிப்பட விளக்கும். அங்ஙனம் கூறிய
பகுதியை உடைய ஒருமையும் பன்மையும் ஆகிய தன்மை வினைமுற்றுச் சொற்களுள்,
செய்கு என்னும் வாய்பாட்டான்வரும் தன்மை ஒருமை வினைமுற்றும் செய்கும் என்னும்
வாய்பாட்டான் வரும் உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினைமுற்றும் பெயரொடு
முடியாது வினைகொண்டு முடியும். அவ்வாறு முடியும் ஆயினும் முற்றுச்சொல் ஆதலில்
திரியாது முற்கூறிய முற்றுச் சொல்லேயாம் என்றவாறு.

மேல் பதவியலுள் கூறிய ஈற்று வகையானே உண்கு- உண்டு- வருது- சேறு-
எனவும் உரிஞுகு- திருமுகு- எனவும் வரும் குற்றுகர ஈற்றுத் தன்மை ஒருமை
முற்றுச்சொல்லும், இடைநிலை வகையானே உண்பல்- வருவல்- என வரும்