அல் ஈற்றுத்தன்மை ஒருமை முற்றுச்சொல்லும், கூறுவன் என வரும் அன் ஈற்றுத் தன்மை ஒருமை முற்றுச்சொல்லும் எதிர்காலம் பற்றி வரும். என்ஈறும் ஏன்ஈறும் இடைநிலை வகையானே மூன்று காலமும் பற்றி வரும்.அவற்றள் என் ஈறு இறப்பும் நிகழ்வும் பற்றி வருங்கால் புக்கனென்- உண்ணாநின்றனென்-என உயர்திணை ஆண்பால் படர்க்கை அன் ஈற்றொடு ஒத்து, இடைநிலைகளின் முன் அன் பெற்றுவரும். ஏனையவற்றொடும் ஒட்டுக. இனி எதிர்காலம்பற்றி வருங்கால், உண்பென்- உண்குவென்- வரூவென்- வருகுவென்- என முதல்நிலை எழுத்தின் முன் குகரம் பெறாதும் பெற்றும் இடைநிலை பெற்று வரும். இனி ஏன் ஈறு இறப்பினும் நிகழ்வினும் புக்கனேன்- புக்கேன்- உண்ணாநின்றனேன்- உண்ணாநின்றேன்- என அன் பெற்றும் பெறாதும், எதிர்வின்கண் உண்பேன்- உண்குவேன்- உரிஞுவேன்- எனக்குகரமும் உகரமும் பெறாதும் பெற்றும் இடைநிலை பெற்றுவரும். ஏனையவற்றொடும் ஒட்டுக. அம்- ஆம்- எம்- ஏம்- ஓம்- என்பன, இடைநிலை வகையானே மூன்றுகாலமும், ஈற்றுவகையானே உம் ஊர் கடதற எதிர்காலமும் பற்றிவரும். அங்ஙனம் வருங்கால், யானும் நீயும் புக்கனம்- புக்காம், யானும் அவனும் புக்கனெம் புக்கெம், யானும் அவனும் புக்கனேம்- புக்கேம், யானும் அவனும் புக்கோம்- எனவும், யானும் நீயும் உண்ணா நின்றனம்- உண்ணாநின்றாம், யானும் அவனும் உண்ணாநின்ற னெம்-உண்ணா நின்றெம், யானும் அவனும் உண்ணாநின்றனேம்-உண்ணாம் நின்றேம், யானும் அவனும் உண்ணாநின்றனோம்-உண்ணாநின்றோம் எனவும், யானும் நீயும் உண்பாம்-உநிஞுவம்-உண்குவம் |