உண்பாம்- உரிஞுவாம்- உண்குவாம், யானும் அவனும் உண்பெம்- உரிஞுவெம்- உண்குவெம்- உண்பேம்- உரிஞுவேம்- உண்குவேம்-உண்போம்-உரிஞுவோம்- உண்குவோம் எனவும், யானும் நீயும் அவனும் உண்கும்-உண்டும்- வருதும்-சேறும் உரிஞுதும் திருமுதும்- எனவும் வரும். இவை அன்பெறும் விகற்பமும் உகரமும் குகரமும் பெறுதலும் முற்கூறியவாறே காண்க. இனிப் ‘பாற்பட’ என்றதனானே, அம் ஆம் என்பன தமராயவழிப் படர்க்கையாரையும் உளப்படுத்தல் கொள்க. தன்மைஇருதிணைக்கும் பொதுவாதல் விரவுப்பெயர் உரைத்த வழி உரைத்தாம். அதனானே |
என்ப ஆகலின், தனித்தன்மைக்கண் அன்விகுதியும், வழக்குப் பயிற்சியான் உளப்படுத்தன்மைக்கண் ஓம் விகுதியும் உடன் ஓதினார். தன்மைக்கு ஒருமை யல்லது இன்மையின் தன்மைப் பன்மையாவது அதனொடு பிறரை உளப்படுத்தலேயாம் என்பார், ‘தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை’ என்றார்.இனி, கரியன்- கரியென்- கரியேன்- எனவும், கரியம்- கரியெம்- கரியேம்- கரியோம்- எனவும்- வினைக்குறிப்பும் வந்தன காண்க. பிறவற்றொடும் ஒட்டுக. காண்கு வந்தேன், காண்கும் வந்தேம்- எனச் செய்கு என் ஒருமையும் செய்கும் என் பன்மையும் வினைகொண்டு முடிந்தவாறு காண்க. |