சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-11309

 
  ‘பெயர்த்த னென் முயங்கயான்’ குறுந். 84 எனவும்,
‘சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப’ எனவும்,
‘மோயினள் உயிர்த்த காலை’ அகம். 5 எனவும்.
 
 
எனைவினைமுற்றுச் சொற்கள் வினை கொள்ளுங்கால் முற்றுச் சொல் ஆதலின் திரிந்து
வினையெச்சம் ஆமாறு போல, வினையெச்சம் ஆகாது முற்றேயாம் என்பார்
‘வினையொடு முடியினும் விளம்பிய முற்றே’ என்றார்.

இரு சாரனவும் பெயர் கொள்ளாது வினைகொண்ட வழிச் செய்கு என் ஒருமையும்
செய்கும் என் பன்மையும் திரியா என்றும் ஏனைய திரியும் என்றும் கூறிய கருத்து.
என்னை எனின், நன்று சொன்னாய்; காண்கு வந்தேன்- காண்கும் வந்தேம்- என்றவழி,
அவை வினையெச்சமாய்த் திரிந்தன ஆயின் செய்து என் எச்சம் ஆதற்கு ஏலாமையின்
செய என் எச்சமாய்த் திரியும் எனல் வேண்டும்; வேண்டவே, செய என் எச்சத்திற்கு
உரிய வினைமுதல் வினையும் பிற வினையும் கொள்வான் செல்லும்; வினைமுதல் வினை
அல்லது கொள்ளாமையின் செய என் எச்சமாய்த் திரியும் எனல் பொருந்தாது. பிறிது
ஆறு இன்மையின் முற்றுச் சொல்லாயே நின்றன எனப்படும் என்க. செய்கு என்பது.
 

  ‘நோகோ யானே’ புறம். 234
 

எனச் சிறுபான்மை பெயர் கோடல் உரையிற் கொள்க. உண்டிலன், உண்டிலம்-
முதலிய இவற்றின் மறைவாய் பாடும் அறிக. 11
 

விளக்கம்
 

நிறுத்தமுறை-236ஆம் நூற்பாவில் நிறுத்தமுறை.
                    தன்மை பொதுவினையாகவே, தன்மை ஒருமை ஒருவன் ஒருத்தி ஒன்று என்ற
மூன்றற்கும் பொதுவாம். அதன் விகுதிகள் கு, டு, து, று, என், ஏன், அல், அன்- என்ற
எட்டாம். இவற்றுள் கு,டு,து,று, அல்- என்பன எதிர்காலம் காட்டு