வனவாம். அன்னும் எதிர்காலத்திற்கு உரித்து என்ப. ஏனைய இரண்டும் முக்காலத்திற்கும் வினைக்குறிப்பிற்கும் பொதுவாம். குகரஈறு பெயரை விடுத்து வினையைக் கொண்டு முடியினும் முற்றாகவே கொள்ளப்படும்.தன்மைக்கு ஒருமை அல்லது இன்மையின் தன்மைப் பன்மையாவது உயர்த்துக் கூறுதற்கண் வழுவமைதியாக வரும் தன்மையொருமையாயும். முன்னின்றாரையும் படர்க்கை யாரையும் அவ்விருதிறத்தாரையும் உளப்படுக்கும் உளப்பாட்டுப் பன்மையாயுமே வரும். தன்மைப் பன்மை விகுதிகள்- அம், ஆம், எம், ஏம், ஓம், கும் டும், தும், றும், - என்ற ஒன்பதாம். இவற்றுள் கும், டும்,தும், றும், - என்பன எதிர்காலம் காட்டும் விகுதிகள்; ஆகவே இவை தெரிநிலை வினைக்கே வருவனவாம். அவற்றுள்ளும் கும் ஈறு பெற்ற முற்றுக்கள் பெயரை விடுத்து வினைகொண்டு முடியினும் வினைமுற்றுக்களேயாம். அம், ஆம்-என்பன முன்னின்றாரையும், தமராயவழிப் படர்க்கை யாரையும் உளப்படுக்கும். எம், ஏம், ஓம்- என்பன படர்க்கையாரை உளப்படுக்கும். இவற்றுள் ஓம் ஈறு ஏம் ஈற்றின் சிதைவாய்ப் புதியது புகுதலால் தோன்றியதாம். கும், டும், தும், றும்- என்பன முன்னின்றார் படர்க்கையார் என்ற இரு பாலாரையும் உளப்படுத்து வழக்கினுள் அருகியே வரும். உண்கு- உண்+கு உண்டு- உண்+டு வருது- வா+து |