| சேறு- செல்+று உரிஞுகு- உரிஞ்+உ+கு; உகரம் சாரியை. திருமுகு- திரும்+உ+கு; ” உண்பல்- உண்+ப்+அல் பகர வகரங்கள் வருவல்- வா+வ்+அல் எதிர்கால இடை கூறுவன்- கூறு+வ்+அன் நிலைகளாம். புக்கனென்- புகு+க்+அன்+என்- உண்ணாநின்றனென் உண்+ஆநின்று+அன்+என் [அன்சாரியை. உண்பென்- உண்+ப்+என் ப்,வ்-இடைநிலை, உண்குவென்- உண்+கு+வ்+என் கு சாரியை. புக்களேன்- புகு+க்+அன்+ஏன்; அன்சாரியை. புக்கேன்- புகு+க்+ஏன் உண்ணா நின்றேன்- உண்+ஆநின்று+அன்+ஏன் அன்சாரியை.
உண்ணாநின்றேன்- உண்+ஆநின்று+ஏன் உண்பேன்- உண்+ப்+ஏன் உண்குவேன்- உண்+கு+ஏன்; கு-சாரியை. உரிஞுவேன்- உரிஞ்+உ+ஏன்; உ-சாரியை.
யானும் நீயும் என்ற தொடர் முன்னின்றானை உளப்படுத்தது. யானும் அவனும் என்ற தொடர் படர்க்கையானை உளப்படுத்தது. யானும்நீயும் அவனும் என்ற தொடர் முன்னின்றான் படர்க்கையான் என்ற இருபாலாரையும் உளப்படுத்தது.
‘யானும் என் எஃகமும் சாறும்’ என்பதே ஈண்டைக்கு எடுத்துக்காட்டாகப் பயன்படும் தொடராம். ‘தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவிஎன்று எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்’ தொல்.சொல். 43 |
|
|
|