செய்கு பற்றிய செய்தியாவும் சேனாவரையர் உரைத்தனவே. (தொல்.சொல் 204) ஏனைய நச்சினார்க்கினியர் சொற்றன. (205, 206) தன்மைக்கு அன் விகுதியும், ஓம் விகுதியும் பிற்காலத்துப் புதுவன புகுதல் என்பது விளக்கப்பட்டது. அன்ஈறு தெரிநிலை வினைக்கண் எதிர்காலத்திற்கே வரும் என்றாரேனும், இக்காலத்து யான் உண்டனன்- யான் உண்ணாநின்றனன்- என ஏனைக்காலத்தும் வருதல் உணரப்படும். அன் ஈறு கரியன் எனக் குறிப்பு முற்றாய் வருமாறு கூறப்பட்டது. |