சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

316 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘பிரிந்து உறை சூழாதி’ கலி.18
என இதன் மறையும் காண்க.
 
  ‘உரைக்கிற்றி,’
‘நன்றுமன் இது நாடாய் கூறி’
 
 
எனச்சிறுபான்மை நிகழ்வும் பற்றி வரும். உண்ணாநிற்ற என்பது எதிர்காலத்தில் பிறந்த நிகழ்காலம்.

நடப்பி - வருவி எனச் செய்வி என் ஏவல் முன்னிலை வினை இகர ஈறு பகர
வகரங்களை ஊர்ந்து எதிர்காலம் பற்றி வரும். உண்டிலை- உண்டிலாய்- என இவற்றின்
மறைவிகற்பமும் அறிக.

நட-வா- மடி- சீ- விடு - கூ- வே- வை- நொ- போ- வௌ- உரிஞ்- உண்-
பொருந்- திரும்- தின்- தேய்- பார்- செல்- வவ்- வாழ்- கேள்- அஃகு- போக்கு- என
‘ஏவலின் வரூஉம் எல்லா ஈற்றவும்’, உண்ணல்- மறால் அழேல்- சொல்லிக்காண்- என
வரும் அல்- ஆல் ஏல்- காண் என்னும் ஈற்றை உடைய முன்னிலை முற்றுக்களும் ஈற்று
வகையானே எதிர்காலம் பற்றி வரும். முன் நின்றான் தொழில் உணர்த்துவனவே அன்றி,
அவனைத் தொழில்படுத்துவனவும் எதிர்முகம் ஆதல் ஒப்புமையான் முன்னிலை ஆயின.
செய்வி என் ஈற்றிற்கும் மின் ஈற்றிற்கும் உம் ஈற்றிற்கும் ஈது ஒக்கும்.

உண்டனிர்- உண்ணாநின்றனிர் உண்பிர்- உண்குவிர்- எனவும், உண்டீர்-
உண்ணாநின்றீர்- உண்பீர்- உண்குவீர்- எனவும் இடைநிலை வகையானே இர் ஈர்
என்பன மூன்று காலமும்,

உண்மின்- உரிஞுமின்- எனவும், உண்ணும்- உரையும் கேளும்- எனவும் ஈற்று
வகையானே மின் ஈறும் உம்