சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

318 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஊக்கி- ஊக்கு+இ
                    உண்டி- உண்+ட்+இ
                    ஒத்தி- ஒ+த்+த்+இ
                    உரைத்தி- உரை+த்+த்+இ

இவற்றுள் விகுதி இகரமே காலங்காட்டுதலின், ட்-த்-ற் என்பன எழுத்துப்
பேறுகளாகக் கொள்க.

சூழாதி-சூழ்+ஆ+த்+இ; சூழ்- பகுதி; ஆ-எதிர்மறை இடைநிலை; த்- எழுத்துப்
பேறு; இ-முன்னிலை ஒருமை வினை முற்று விகுதி.

உரைக்கிற்றி- உரை+க்+கின்று+இ; உண்ணா நிற்றி- உண்+ஆநின்று+இ- இவற்றுள்
கின்று, ஆ நின்று என்பனவற்றால் விகுதி தனக்குரிய எதிர்காலத்தை விடுத்து
நிகழ்காலத்தைக் காட்டுதற்குப் பயன்பட்டவாறு காண்க.

நடப்பி, வருவி- என்பன செய்வி என்னும் ஏவற்பகுதிகள்; இவை எதிர்கால
வினைமுற்றுக்களாய் வரும்.

உண்டிலை- உண்+ட்+இல்+ஐ; ட்- இறந்தகால இடைநிலை; இல்+ எதிர்மறை
இடைநிலை.

உண்டிலாய்- உண்+ட்+இல்+ஆய்; ட்- இறந்தகால இடைநிலை, இல்+எதிர்மறை
இடைநிலை.

ஐ, ஆய் என்பன முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள்.

உண்ணல், மறால், அழேல்- என்பன எதிர்காலத்தின் கண்வரும் முன்னிலை
ஒருமை எதிர்மறை முற்றுக்களாம்.

சொல்லிக்காண்- எதிர்கால முன்னிலை ஒருமை முற்று.

செய், செய்வி என்றவாய்பாடுகளும் மின், உம் என்ற ஈறுகளும் முன்னிலையின்
ஒருகூறாகிய ஏவலைஉணர்த்துவன.