சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-12319

உண்டனிர் - உண்+ட்+அன்+இர்
                    உண்ணா நின்றனிர் - உண்+ஆநின்று+அன்+இர்
                    உண்பிர் - உண்+ப்+இர்
                    உண்குவிர் - உண்+கு+வ்+இர்

இவற்றுள் ட், ஆநின்று, ப், வ்-என்ற இடைநிலைகள் காலம் காட்டின; அன்னும்
குகரமும் சாரியை.

மின், உம் - என்ற விகுதிகளே எதிர்காலம் காட்டும்.
                    உண்மின்- உண்+மின்
                    உரிஞுமின்- உரிஞ்+உ+மின்; உ- சாரியை.
                    உண்ணும்- உண்+உம்
                    உரையும்- உரை+உம்
                    கேளும்- கேள்+உம்
                    உண்டிலிர்- உண்+ட்+இல்+இர்
                    உண்டிலீர்- உண்-ட்+இல்+ஈர்
                    உண்ணன்மின்- உண்+அல்+மின்

ஐ, ஆய், இர், ஈர்- என்ற விகுதிகளைக்கொண்டு குறிப்பு வினைவரும். ஏனைய இ,
மின், அல், ஆல், ஏல், காண், உம் என்பன எதிர்காலம் காட்டுதலின் குறிப்புவினைக்கண்
வாரா என்பது காண்க.

உம் ஈறு முன்னிலைப் பன்மைக்கண் வருதல் புதியன புகுதலால் கொள்க. இது
செய்யும் என்னும் முற்று அன்று.

இந்நூற்பா உரை ஏற்றபெற்றி தொல்.சொல்.225 226 ஆம் நூற்பாக்களுக்கு
நச்சினார்க்கினியர் வரைந்த உரையை உட்கொண்டு வரையப்பட்டது.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘முன்னிலைக்கிளவி
இ ஐ ஆய்என வரூஉம் மூன்றும்
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்.’
 



தொல்.சொல்.223