சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

34 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளக்கம்
 

முன்னர்கூறிய இடம்- 166 ஆம் நூற்பா.

தொல்காப்பியனார் தன்மையை உயர்திணை என்பர். பின்னுள்ளோர் பலருக்கும்
தன்மை இருதிணைக்கும் பொது என்பதே கருத்தாதல் அறிக.
 

 ‘நீயிர் நீஎன வரூஉங் கிளவி
பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள.’

‘ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கும் உரித்தே சுட்டுங்காலை.’

‘இன்ன பெயரே இவையெனல் வேண்டின்
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்.’


தொல்.சொல்.188

191


193
 
என்ற தொல்காப்பிய நூற்பாவானும் நீயிர்- நீ- ஒருவர் என்ற சொற்கள் குறிப்பாலேயே
திணையும் பாலும் விளக்கும் என்பது பெறப்படும்.

மழை பெய்தலான் முல்லை அருபுதலும், நிலன் நீர் தீ வளி விசும்பு என்ற ஐந்து
பூதங்களின் சேர்க்கையான் உடம்பு தோன்றுதலும் உட்கொண்டு எடுத்துக்காட்டுக்கள்
தரப்பட்டன.
 

 ‘எத்திணை மருங்கினும் மகடூ மடன்மா
பொற்புடை நெறிமை இன்மை யான.’

‘கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்’
 


(தொல்.பொருள்-3)




குறள். 1137
என்பனவற்றை உட்கொண்டு மடலேறுதல் ஆண்பாற்கே உரிய செயல் என்று
வரையறுத்து, ‘ஒருவரான் அரிய மடல் பெற்றேன்’ என்ற எடுத்துக்காட்டில் கூறுவோன்
ஆண்பாலாக, ஒருவர் என்பது பெண்பாலாதல் குறிப்பால்