சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-935

கொள்ளப்பட்டது. ‘பெண்ணறிவு பேதைமைத்து’ என்பது பண்டையார் கொள்கை.
பெண்கல்வியை முதற்கண் வற்புறுத்திக் கூறிய கம்பரும்,

‘பெண்மையான் உரைசெயப் பெறுதிரால்’-ஆரணிய
                    ‘பிழைத்தனை பாவிநின் பெண்மையால்’- கிட்கிந்தா.
                    ‘பெரிய பேதைமை சின்மதிப் பெண்மையால்’- சுந்தர.
                    ‘மங்குலில் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து’- உயுத்த.

என்ற தொடர்களால் பெண்ணறிவு பேதைமைத்து என்று சுட்டியும் காண்க.
 

 ‘இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும்
உரியவை உரிய பெயர்வயி னான’


தொல்.சொல்.161
 
என்ற தொல்காப்பிய நூற்பாவினால் வினைச்சொற்கள் போலப் பெயர்ச்சொற்கள்
படர்க்கையினும் ஈறு பற்றிப் பால் விளக்குதல் திரிபின்றி அமைவது ஒன்று அன்று
என்பது போதரும்.

அவன், பெண்மகன், மகன்- னகரஈறு ஆண்பாலினையும் பெண்பாலினையும்
விரவுத்திணையையும் உணர்த்தியது.

பெருமாள், கோமாள், மகள் - ளகரஈறு ஆண்பாலினையும் பெண்பாலினையும்
விரவுத்திணையையும் உணர்த்தியது.

நம்பி, பெண்டாட்டி - இகரஈறு ஆண்பாலினையும் பெண்பாலினையும்
உணர்த்தியது.

ஆடூ, மகடூ - ஊகாரஈறு ஆண்பாலினையும் பெண்பாலினையும் உணர்த்தியது.

ஆகவே, படர்க்கைப் பெயர்கள் திரிபின்றிப் பால்விளக்கும் படர்க்கைவினை
போல்வனவல்ல என்ற சேனாவரையர் உரையையும் நோக்குக. இதனை உட்கொண்டே,
தொல்காப்பியனார் படர்க்கை வினைமுற்றே திரிபின்றிப் பால்விளக்கும் என்பதனை