என்று கூறினார் என்க. ‘குறிப்பின்’ என்பதற்குக் குறித்தால் என்று பொருள் செய்வர் சங்கர நமசிவாயரும் சிவஞானமுனிவரும்; குறிப்பினாலும் என்று பொருள் செய்வர் மயிலைநாதரும் இவ்வாசிரியரும். குறிப்புச்சொல் என வேறொன்று இன்றுமுதலிய செய்திகளான், இவ்வாசிரியர் கருத்தை அவர்கள் மறுக்க முற்பட்டவர். படர்க்கை வினைமுற்றும் பெயரும் குறிப்பினானும் வெளிப்படையானும் திணை பால் என்பன காட்டும் என்று செம்பொருளைத் திரியக்கொண்டு எழுதிய அம்மறுப்பின் பொருத்தமின்மை ஓர்க. படர்க்கைவினைமுற்று வெளிப்படையாகத் திணைபால் என்பன காட்டுதலும், படர்க்கைப் பெயர்கள் அங்ஙனம் வெளிப்படையாகக் காட்டும் இயல்பினவல்லவாகப் பல இருத்தலின் அவை குறிப்பால் திணைபால் என்பன காட்டுதலும் எடுதுக்காட்டுக்கள் வாயிலாக விளக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் குறிப்புச்சொல் என்று பெயரிட்டு ஆளாமையும் காண்க. இதுபற்றி முனிவர் இலக்கண விளக்கச் சூறாவளியில் எதுவும் குறிப்பிடாமையும் கருதத்தக்கது. |