செய்யும் என்னும் உம் ஈற்று முன்னிலைப்பன்மை வினை முற்றுப்பற்றிய செய்தி ஆசிரியர் வரைந்தன. ஏனைய தொல்காப்பிய உரையாசிரியர்கள் முதலியோர் சொற்றன.
|
ஒத்த நூற்பாக்கள |
| ‘அவற்றுள், செய்யும் என்னும் பெயர்எஞ்சு கிளவிக்கு மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம் அவ்விடன் அறிதல் என்மனார் புலவர்.’
‘உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே.’ முழுதும் - ‘உம்ஈற்று எச்சத்து ஈறும் ஈற்றயல் உயிரும் உயிர்மெய்யும் ஒழிதலாம் செய்யுட்கு உம்உந்து ஆகலும் ஒக்கும் என்ப.’
‘செய்யும்என் முற்றே மற்றதன் ஈற்றயல் உயிரும் உயிர்மெய்யும் ஓழிந்தே அஃகலும்.’ |
தொல்.சொல்.238 292 நன். 341, மு.வீ.வி.38
தொ.வி.118
107 |
வினையெச்சம் - சிறப்புவிதி |
245
| செய்து செய்யூ முதலவாய் பாட்டின் தன்வினை பிறவினை ஆயிரு வினையொடு முடியும் முறையது வினையெச் சம்மே. | |
இது வினையெச்சத்திற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது; இத்துணை வாய்பாட்டான் நிகழும் எனவும், இவ்வினைச் சொற்களான் முடியும் எனவும் கூறுகின்றமையின். இ-ள்; செய்து செய்யூ முதலிய வாய்பாட்டான் புலப்பட்டுத் தன்னை நிகழ்த்திய வினைமுதலான் நிகழ்ந்தவினையும் பிறவற்றின் வினையும் ஆகிய அவ்விருவகை வினையொடும் |