முடியும் இயல்பினை உடையது வினையெச்சச் சொல்லாக என்றவாறு. 19
விளக்கம்
எய்தியது- 242ஆம் நூற்பாச் செய்தி. வினையெச்ச வாய்பாடுகள் பல. வினையெச்சங்கள் தன் வினைமுதல்வினையைக் கொண்டே முடிவனவும், தன்வினை- முதல்வினை, பிறவினைமுதல்வினை என்ற இரண்டையும் கொண்டு முடிவனவும் என இருதிறத்தன என்றவாறு.
ஒத்த நூற்பாக்கள்:
‘எச்சமே தொழில் பொழுது என்றிவை தோன்றி இடம்பால் தோன்றாது எஞ்சிய வினையன அவற்றுள் வினையொடு புணர்வது வினையெச் சம்மே.’
‘வினையெச் சம்கொள் விகுதி இஉ ஊவோடு எனவும் ஊபு ஆஇறப்பே அ-இரு கருத்தா அணையின் நிகழ்வே ஒருகருத் தாவும் ஓரிடத்து இரண்டும் இயைப அன்றி இல்இன் இல்இலா வான்பான் பாக்கு வரும்பொழு தாம்பிற.’