சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-20353

  நக்கு- நகு+க்+உ; உண்டு- உண்+ட்+உ;
வந்து - வா+த்+உ; சென்று- செல்+ற்+உ;
உண்ணு- உண்+ஊ; தின்னூ- தின்+ஊ;
காணூஉ- காண்+ஊஉ; உண்ணா- உண்+ஆ; கல்லா- கல்+ஆ;
துவ்வா- து+வ்+ஆ(வ்- எழுத்துப் பேறு)
வாக்குபு- வாக்கு+பு; இடுபு- இடு+பு;
உரிஞுபு- உரிஞ்+உ+பு; கற்குபு- கல்+கு+பு;உகரமும் குகரமும் சாரியை;
புக்கென- புகு+க்+என; உண்டென- உண்+ட்+என;
உரைத்தென- உரை+த்+த்+என; தின்றென- தின்+ற்+என;
பட- படு+அ; வாழ- வாழ்+அ;
பெய்யின்- பெய்+இன்; உணரின்- உணர்+இன்;
நடப்பின்- நட+ப்+ப்+இன்; உரைப்பின்- உரை+ப்+ப்+இன்; முதல்-ப்-சந்தி.
உண்ணிய- உண்+இய; தின்னிய- தின்+இய;
உண்ணியர்- உண்+இயர்; தின்னியர்- தின்+இயர்;
போகிய- போ+கு+இய; போகியர்- போ+கு-இயர்;
கொல்வான் கொல்+வான்; அலைப்பான்- அலை+ப்+பான்; ட்-சந்தி.
தருபாக்கு- தா+பாக்கு; உணற்கு- உண்+அன்+கு.
பின் ஈறு- இறந்தகாலமும் நிகழ்காலமும் காட்டும்.
முன்- இறந்தகாலம் காட்டும்,
கால்- இறந்தகாலமும் நிகழ்காலமும் காட்டும்,
கடை- இறந்தகாலம் காட்டும்.
வழி- மூன்று காலமும் காட்டும்.
இடத்து- மூன்று காலமும் காட்டும்.