‘தலைவன் பிரியத் தலைவி வருந்தினாள்’ என்பது ‘தலைவன் பிரிந்து தலைவி வருந்தினாள்’ எனவும், ‘மயங்கத்தூறு அதர்ப்பட்ட, என்பது ‘மயங்கி அதர்ப்பட்ட’ எனவும், ‘வான் நிற்ப உலகம் வழங்கி வருதலான், என்பது, ‘வான் நின்று உலகம் வழங்கி வருதலான்’ எனவும் ‘நமது நலன் நுகர நாம் விரும்புதும்’ என்பது ‘நமது நலன் நுகர்வான் யாம் விரும்புதும்’ எனவும், ‘கற்க நூல் செய்தான்’ என்பது ‘கற்பான் நூல் செய்தான்’ எனவும், ‘செல்வம் தர யாம் விரும்புதும்’ என்பது ‘செல்வம் தரு பாக்கு யாம் விரும்புதும்’ எனவும் செய என் எச்சம் செய்து என் எச்சமாயும் வான் பான் பாக்கு ஈறாயும் திரிந்து வருதலும் கொள்க. உரைப்ப, உரைக்க- என்பன உரைத்தலைச்செய்ய என்னும் பொருளவாக, ‘செய என்’ எச்சம் பகர ஈறாகவும் ககர ஈறாவும் வந்தது. செய என்னும் எச்சத்தின் மறை அல்ஈறும் மையீறும் பெறும். செயின் என்ற வாய்பாடு நடக்கலும் (நடப்பின்) அன்றால் (அறின்) என உம் ஈறாயும் ஆல்ஈறாயும் திரியும். இன்ன இன்ன வாய்பாட்டின் திரிபு என்பதனைப் பொருள் நோக்கி உணரலாம், ஓடிவந்தான், விரைந்து போயினான்: ஓடி-விரைந்து- என்ற வினையெச்சங்கள் தம் தொழிலான் முறையே வந்தான் போயினான் என்ற முற்றுக்களை விசேடித்தன. வெய்ய சிறிய மிழற்றும் செவ்வாய்: வெய்ய- சிறிய- என்ற குறிப்பெச்சங்கள் பண் பான்மிழற்றுதலை விசேடித்தன. செவ்வன் தெரிகிற்பான்- புதுவதின் இயன்ற அணியன்- செவ்வன், புதுவதின் என்ற குறிப்பு வினையெச்சங்கள் |