உண்ணூ வந்தான், ‘நிலம்புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்’ எனவும், உண்ணா வந்தான், ‘நிலம்கிளையா நாணி நின்றோள் நிலை’- அகம். 16 எனவும், உண்குபு வந்தான், ‘தெரிபு தெரிபு குத்தின ஏறு’ கலி-103 எனவும், ‘கொல்வான் கொடித்தானை கொண்டுஎழுந்தான்’ பு.வெ.99 ‘திருவில்தான் மாரி கற்பான் துவலைநாள் செய்த தேபோல்’ சீவக.2070 எனவும், ‘புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்’ கார். நாற். 11 எனவும், முதலில் நான்கும் ஈற்றின் மூன்றும் வினைமுதல் வினைகொண்டு முடிந்தவாறு காண்க. வினைமுதல் வினையை ‘வினைமுதல்’ என்றார், ஆகுபெயரான். மழைபெய்தெனப் புகழ் பெற்றது, ‘காந்தளஞ் சிலம்பின் சிறுகுடி பசித்தெனக் கடுங்கண் யானை கோடுநொடுத்து உண்ணும்’ குறுந்.100 எனவும், மழை பெய்தென மரம் குழைத்தது. |